என்ன??!! கடவுளை ப்ளாக் மெயில் செய்யனுமா!! சரிதான் என்று சிரிக்காதீர்கள்
கடவுளை பக்தர்கள் ப்ளாக் மெயில் செய்யும் காட்சிகள் நம் தமிழ் சினிமாவில் ஏராளம் உண்டு
கடவுள் தோன்ற வில்லை என்றால் சூலத்தை எடுத்து குத்தி மிரட்டுவது, பீடத்தில் தலையை முட்டிக்கொண்டு அழுவது, உன் சன்னதிக்கே வரமாட்டேன் என்று மிரட்டுவது போன்ற இக்கட்டுகளை ஏற்படுத்தி இறைமையை தோன்ற செய்வது ஒரு ப்ளாக்மெயில்
ஆனால் நம் அப்பர் பெருமான் வேறு விதத்தை நமக்கு சொல்லி தருகிறார்
அது அன்பு வழி, இன்ப வழி, புண்ணிய வழி, அவரும் பின்பற்றிய வழி🙏🏻
சிவன் எனும் நாமந் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில் அவன் தனை யான்
பவன் எனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே
என்பது பாடல் இது நான்காம் திருமுறையில் உள்ள ஒரு பொதுப்பதிகப் பாடல்
அதாவது அப்பரடிகளை ஆட்கொண்ட இறைவன் நம்முடைய சிவபெருமான்.அவன் சிவந்த மேணி உடைய செம்மேணி எம்மான் ஆதலால் அவனை சிவன்என்று அழைக்கிறோம்
என்பதைத்தான்
சிவன் எனும் நாமந் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில்
என்ற வரிகளில் சொல்கிறார் சுவாமிகள்
அந்த செம்மேணி உடைய சிவபெருமானே நம்மை பாவங்களில் இருந்து காக்கும் பெருமான் ஆதலால் பவன் என்ற பெயரால் அவனை இடைவிடாது அழைத்து கொண்டே இருக்க வேண்டும்
எப்போதும் ஐந்தெழுத்துஓதியபடியே இருக்க வேண்டும்
அப்படி ஓதி அழைத்தால் சிவம் என்ன செய்யும்??!!
இவன் நம்மள எப்ப பாத்தாலும் கூப்பிட்டுகிட்டே இருக்கான் நாம நேர்ல போய் நிக்காத வரைக்கும் கூப்டுறத நிறுத்த மாட்டான் என்று எண்ணிய படியே எதிரே வந்து தோன்றும்
என்ற அற்புத கருத்தைத்தான்
அவன் தனை யான்
பவன் எனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் (பல நாள்) அழைத்தால்
இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் (கூப்பிடுவதை நிறுத்த மாட்டான்) என்று எதிர்ப்படுமே
என்ற வரிகளில் செல்லி நம் சைவத்தில் சுவாரசியத்தை புகுத்தியுள்ளர் அப்பரடிகள்
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய

No comments:
Post a Comment