கவி காளமேகப் புலவருடைய பாடல்களில் நம்பெருமான் ஈசனை அதிகமாக புகழந்து உரிமையுடன் ஏகடியமும் செய்தும் பாடி இருப்பார்
அப்படி ஒரு பாடல் தான் இது
மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும்
கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோ
தொண்டர் விருந்தைப் பார்த்து உண்டருளும் வேளூர் என் நாதர்
மருந்தைப் பார்த்தால் சுத்த மண்
அதாவது புள்ளிருக்கு வேளூர் என்னும் இன்றைய வைத்தீசுவரன் கோயிலில் இறைவன் உலகத்து வியாதிக்கு எல்லாம் மருத்துவனாக திகழ்கிறான்
என்றாலும் நஞ்சு உண்டதால் தன் கண்டம் கருத்துள்ளதை சரி பண்ணி கொள்ளும் வைத்தியம் அவருக்கு தெரியவில்லை போலும் என்று கேலியாக சிரிக்கிறார் புலவர்
மண்டலத்தில் நாளும் வயித்தியராய்த் தாம் இருந்தும்
கண்ட வினை தீர்க்கில்லார் கண்டீரோ
என்கிற வரிகளில்
அத்தகைய வைத்தியனுக்கு வருமானம் என்னவென்றால் தொண்டர்களின் பக்திதான்
சரி அவர் கொடுக்கும் மருந்துதான் என்னவென்று பார்த்தோமானால் வெறும் மண் தானாம்
அதாவது வியாதி குணமாக வேண்டும் அப்பா ஈசா காப்பாத்து என்று இறை சிந்தனையில் எவர் ஒருவர் புள்ளிருக்கு வேளூர் மண்ணை மிதிக்கிறார்களோ அவர்கள் வியாதி உடனே குணமாகும்
என்கிற கருத்தை அமைத்து புலவர்
வேளூர் என் நாதர் மருந்தை பார்த்தால் சுத்த மண்
என்று குறித்து மகிழ்கிறார்
வேளூர் என் நாதர் என்று புலவர் குறிக்கும் வரியில்தான் இறைவன் மீது எத்தனை உரிமை அவருக்கு🙏🏻
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய

No comments:
Post a Comment