பதிவுகள்

Saturday, 15 April 2017

ஆட்டுக்கார சிவனும் வேட்டைக்கார புலியும்



இது என்னடா?!! தலைப்பு ஆட்டுக்கார சிவம் என்று நிச்சயம் குழம்புவீர்கள்

 ஆனால் அப்படித்தான் நம் சிவம் ஆடு வளர்ப்பதாகவும் அதனை வேட்டையாட ஒரு புலி காத்திருப்பதாகவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் காளமேகப் புலவர்

நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால், ஐயா! நின் ஆட்டுக்கு இரண்டு கால்�

ஆனாலும், நாட்டம் உள்ள சீர் மேவு தில்லைச் சிவனே;

இல் ஆட்டை விட்டுப் போமோ, சொல்வாய்! அப்புலி?

என்பது பாடல்

தில்லையில் உறையும் சிவனே,
உலகத்தில் உள்ள ஆடுகளுக்கு எல்லாம் நாலு கால்கள்தான் ஆனால் உனது ஆட்டிற்கோ இரண்டு கால்தான்

நாலுகால்கள் வைத்து கொண்டு பாய்ந்தோடும் ஆடுகளையே புலி வேட்டையாடி விடும் உன்னுடைய இரண்டு கால் ஆட்டை விட்டு போகுமோ?!

என்பது போல் இருக்கும் இப்பாடலின் பொருளே வேறு

அப்பனே இறைவா!! நீ ஒரு காலை ஊன்றி ஒரு காலை தூக்கி தில்லையில் திருக்கூத்து நடத்துகிறாயே அந்த ஆனந்த தாண்டவத்தில் மயங்கி புலிக்கால் முனிவர் உன்னை விட்டு விலகாது இருக்கிறார்

என்ற கருத்து செறிவினை உடைய பாடலை,


தன் பாணி நக்கலுடன் நான்கு கால் விலங்கான ஆட்டில் துவங்கி

இறைனது ஆட்டத்தை இரண்டுகால் ஆ(ட்)டு என்று குறித்து புலிக்கால் முனிவராம் வியாக்ர பாதரை புலி என்று சுருக்கமாக குறித்து

தமிழின் வல்லமையயும் இறை சிந்தனை நயத்தையும் ஒரு சேர விளங்க வைக்கிறார் புலவர்.

காலை நேரத்தில் கொன்றை மரங்களில் ஏறி மலர் கொய்ய முடியவில்லை பனி வழுக்குகிறது

கால்  வழுக்காமல் மரம் ஏற இறைவா!! என் கால்களை புலியின் கால்கள் போல மாற்று என்று வரம் கேட்ட புண்ணியர் புலிக்கால் முனிவர்

நாமெல்லாம் பூசை செய்து வரம் கேட்பவர்கள் அவர் பூசை செய்வதற்காகவே வரம் கேட்டவர்

இவரால் தான் புலியூர், பெரும்பற்ற புலியூர், புலியூர் சிற்றம்பலம்என்றெல்லாம் நம் தில்லை அழைக்கப் படுகிறது சிதம்பரம் என்பது வெகு சமீபகால பெயர்

புலியூர் என்பதே திருமுறைகளும் கல்வெட்டுகளும் போற்றி பரவும் பெயர்

ஒரு பாடல்; அதில் இலக்கிய நயம் பக்தி நயம் இரண்டையும் புகுத்தி உள்ளார் புலவர்

தீபன்ராஜ் வாழ்க்கை

நமசிவாய

No comments:

Post a Comment