என்கிற தலைப்பில் வரலாற்றின் பிழையான பக்கம் ஒன்றை புரட்டுவோம்🙏🏻
பொதுவாகவே நம் திருமுறை வரிகள் ஒவ்வொன்றுமே ஆழ்ந்த பொருள் மிக்கவை என்றாலும்
திருமுறைகளில் பல இடங்களில் நமக்கு இன்றும் சரியான பொருள் தெரிவதில்லை
இன்றைய உரையாசிரியர்கள் பலரும் புரியாத பாடல்களுக்கு பெரிய புராணத்தில் சேக்கிழார் சொல்லும் பொருளை வைத்து தங்கள் மனப்பாங்கை வைத்து உரை செய்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை,
உண்மையில் சேக்கிழார் ஒரு தீர்க்க தரிசி என்றே கூறலாம்
மூவர் முதலிகளின் ஒவ்வொரு பாடல்களையும் தரவாக ஓதியுணர்ந் த சேக்கிழார், வருங்காலத்தினர்
நிச்சயம் பொருள் விளங்க சிரமப்படுவார்கள் என்று பெரியபுராணத்திலேய சில தேவாரப் பாடல்களுக்கு விளக்கமும் தருவார்
சரி நிற்க; இதை ஏன் இப்போது சொல்கிறோம் என்றால்
திருமுறை வரி ஒன்றை தவறாக அர்த்தம் பண்ணி கொண்ட சிற்பி ஒருவரும் அதனை சரியாக ஆராயாத ஓவியர் ஒருவரும்
தங்கள் மனக்கற்பணையை வரலாறாக்கி சென்று விட்டனர்
என்ற சங்கதிக்கு வரத்தான்
தஞ்சாவூர் அருகே இருக்கும் பனையமங்கலம் என்னும் ஊரில் ஒரு அப்பர் மடம் சில வரலாற்று அறிஞர்களால் கண்டறியபட்டது
அந்த வரலாற்று அறிஞர்களையும் நம்மையும் ஆச்சரியப் படுத்துவது அங்குள் ஒரு ஓவியம்
சிவலிங்கத்தில் இருந்து புறப்பட்ட சிங்கம் ஒன்று நம் அப்பரடிகளின் தலையை கவ்வி விழுங்குவது போல அந்த ஓவியம் வரையப் பட்டுள்ளது
அப்பர் சுவாமிகள் திருப்புகலூரில் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே என்று பாடி
சிவலிங்கத்தில் கலந்து விட்டர் என்பது நாடறிந்த உண்மை
இந்த சம்பவத்தை காட்சி படுத்த எண்ணிய சிற்பி அப்பரது பூம்புகலூர் பதிகத்தில் வரும் ஒரு வரியை
தன் கற்பனை திறத்துடன் கையாண்டதே அந்த ஓவிய வெளிப்பாடு
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே
என்ற வரிகளில் சுவாமிகள் இறைவனை சாவா மூவா சிங்கமே என்று வர்ணிக்க,
இதனை பிடித்து கொண்ட சிற்பி
இறைவன் சிங்கமாகவே வந்து அப்பரது தலையை கவ்வி இழுத்து லிங்கத்துக்குள் ஐக்கியம் செய்து கொள்ளும் படி ஒரு சிலையை திருப்புகலூர் விமானத்தில் வைக்க,
அதனை கண்ட ஒரு பதினைந்தாம் நூற்றாண்டு ஓவியர்
இந்த பதிவுடன் இணைக்கப் பட்டுள்ள அந்த ஓவியத்தை பனைய மங்கலத்தில் வரைந்து வைத்து விட்டார்
அப்பர்தான் இறைவனை சாவா மூவா சிங்கம் என்கிறார்
அவர் சிவலிங்கத்தில் ஐக்கியமான வரலாறுதான் ஓவியத்தில் காட்டப் படுகிறது என்றாலும்
பதிக வரிகளை மனம் போன போக்கில் புரிந்து செயல்பட்டால் இப்படித்தான் வரலாற்று கோணல்கள் உண்டாகும் என்பதற்கு இந்த ஓவியம் ஒரு சான்று🙏🏻
தீபன்ராஜ் வாழ்க்கை
நமசிவாய
No comments:
Post a Comment